/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஒ.என்.ஜி.சி.,சார்பில் கட்டுரைப் போட்டி
/
ஒ.என்.ஜி.சி.,சார்பில் கட்டுரைப் போட்டி
ADDED : நவ 08, 2024 05:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால்: காரைக்காலில் ஒ.என்.ஜி.சி.,சார்பில் லஞ்சஒழிப்பு குறித்து விழிப்புணர்வு வார விழாவை முன்னிட்டு கட்டுரைப் போட்டி நடந்தது.
காரைக்கால் நிரவி ஒ.என்.ஜி.சி.,காவேரி அசெட் சார்பில் லஞ்ச ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு வார விழா நேற்று முன்தினம் நடந்தது. விழாவில் கட்டுரை போட்டி,ஓவியப்போட்டி,ஸ்லோகன் எழுதுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்றனர். இதில் செயல் இயக்குநர் உதய்பாஸ்வான் தலைமையில் போட்டியில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
அசட் சப்போர்ட் மேலாளர் மாறன் முன்னிலை வகித்தார்.இதில் ஏராளாமானோர் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

