/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு பள்ளியில் நன்னெறி பயிற்சி முகாம்
/
அரசு பள்ளியில் நன்னெறி பயிற்சி முகாம்
ADDED : ஜன 28, 2026 05:30 AM

புதுச்சேரி: முதலியார்பேட்டை, அர்ச்சுன சுப்பராய நாயக்கர் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான நன்னெறி மற்றும் போதைப் பொருள் தடுப்பு முகாம் நடந்தது.
தலைமை ஆசிரியர் கோமதி தலைமை தாங்கினார். ஆசிரியர் கதிரவன் வரவேற்றார்.
போதைப் பொருள் தடுப்பு இன்ஸ்பெக்டர் ரமேஷ் சம்பத் முகாமை துவக்கி வைத்து மது, போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள், உடல் நலப் பாதிப்புகள், குடும்பத்தில் ஏற்படும் சிக்கல்கள், சட்டம் ஒழுங்குப் பிரச்னைகள், இணையதள விளையாட்டுகளால் ஏற்படும் பண இழப்புகள், சமூக ஊடகங்களில் மூழ்கிக் கிடப்பதால் ஏற்படும் மன நிலை மாற்றங்கள் குறித்து விளக்கினார்.
புதுச்சேரி அரசின் சிறுவர் நலக்குழு முன்னாள் உறுப்பினர் எழுத்தாளர் அரிமதி இளம்பரிதி கல்வி, அறிவு, ஒழுக்கம், சுயக்கட்டுப்பாட்டின் முக்கியத்துவம், திறன் சார்ந்த கல்வி முறையைத் தேர்வு செய்யும் வழிமுறைகள், இந்திய அரசின் குடிமைப் பணி, வங்கித் தேர்வுகள், பேச்சாற்றல், ஆளுமைத் திறன்கள் குறித்து பேசினார். ஆசிரியர் ஷீலா தொகுத்து வழங்கினார். ஆசிரியர் அய்யனாரப்பன் நன்றி கூறினார். ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

