sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இ.வி.எம்., மற்றும் வி.வி.பாட் இயந்திரங்கள் தற்செயல் கலப்பு முறை ஒதுக்கீடு பணி

 இ.வி.எம்., மற்றும் வி.வி.பாட் இயந்திரங்கள் தற்செயல் கலப்பு முறை ஒதுக்கீடு பணி

 இ.வி.எம்., மற்றும் வி.வி.பாட் இயந்திரங்கள் தற்செயல் கலப்பு முறை ஒதுக்கீடு பணி


ADDED : மார் 20, 2026 07:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 20, 2026 07:32 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கு பயன்படுத்தப்பட உள்ள மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரம் (இ.வி.எம்.) மற்றும் வாக்காளர் சரிபார்ப்பு காகித பதிவு இயந்திரம் (வி.வி.பாட்) மெஷின் தொகுதி வாரியாக ஒதுக்குவதற்காக, தற்செயல் கலப்பு முறை ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டது.

இதுகுறித்து தலைமை தேர்தல் அதிகாரி ஜவஹர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

முதல் கட்ட பரிசோதனை முடிக்கப்பட்ட மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரம் (இ.வி.எம்.) மற்றும் வாக்காளர் சரிபார்ப்பு காகித பதிவு இயந்திரம் (வி.வி.பாட்) ஆகியவற்றை தொகுதி வாரியாக ஒதுக்குவதற்காக, மாவட்ட தேர்தல் அதிகாரி மூலம் முதல் தற்செயல் கலப்பு முறை ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டது.

இதில் இ.வி.எம்., மற்றும் வி.வி.பாட் கருவிகளின் முதல் தற்செயல் கலப்பு முறை ஒதுக்கீடு தொடர்பான விரிவான வழிமுறைகள், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் https://www.eci.gov.in/evm-vvpat இணையதளத்தில் கிடைக்கும்.

அதன்படி, இ.வி.எம்., மற்றும் வி.வி.பாட் இயந்திரம் புதுச்சேரி, காரைக்கால் பகுதிக்கு வரும் 18ம் தேதி ஓதுக்கீடு செய்யப்பட உள்ளது.

மாவட்ட தேர்தல் அதிகாரியால் தேசிய மற்றும் மாநில அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மின்னணு ஓட்டுப்பதிவு மேலாண்மை அமைப்பின் மூலம் தற்செயல் கலப்பு முறை ஓதுக்கீடு மேற்கொள்ளப்பட்டது.

முதல் தற்செயல் கலப்பு முறை ஓதுக்கீடு நிறைவடைந்த பின், தொகுதிவாரியாக ஒதுக்கப்பட்ட இ.வி.எம்., மற்றும் வி.வி.பாட் இயந்திரங்கள் அனைத்தும் தேசிய மற்றும் மாநில அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு மாவட்ட தலைமையகத்தில் வழங்கப்பட்டது. அதன் பின், இ.வி.எம். மற்றும் வி.வி.பாட் இயந்திரங்கள் தேர்தலில் பயன்படுத்துவதற்காக சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.

இந்த இயந்திரங்கள் தேசிய மற்றும் மாநில அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், சம்பந்தப்பட்ட சட்டசபை தொகுதிகளுக்கு பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டன.

போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி பட்டியல் வெளியிடப்பட்ட பின், முதல் தற்செயல் கலப்பு முறை ஒதுக்கீடு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் சரிபார்ப்பு காகித பதிவு இயந்திரங்களின் பட்டியல் அனைத்தும் வேட்பாளர்களுக்கும் பகிரப்படும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us