/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாசன வாய்க்காலில் கழிவுநீர் கலப்பு மாஜி துணை சபாநாயகர் மனு
/
பாசன வாய்க்காலில் கழிவுநீர் கலப்பு மாஜி துணை சபாநாயகர் மனு
பாசன வாய்க்காலில் கழிவுநீர் கலப்பு மாஜி துணை சபாநாயகர் மனு
பாசன வாய்க்காலில் கழிவுநீர் கலப்பு மாஜி துணை சபாநாயகர் மனு
ADDED : ஜன 19, 2024 10:59 PM

புதுச்சேரி, -உழவர்கரை தொகுதியில் பாசன வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, முன்னாள் துணை சபாநாயகர் பாலன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர், குடியிருப்போர் சங்கத்தினருடன் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் உமாபதியை சந்தித்து அளித்த மனு விபரம்;
உழவர்கரை தொகுதி ரெட்டியார்பாளையம், ஜெயா நகர், மரியாள் நகர், செல்லம்பாப்பு நகர், தேவா நகர், அன்னை நகர், கல்யாணசுந்தரம் நகர் ஆகிய பகுதிகளில் பாதாள சாக்கடை கழிவுநீர், சாலைகளில் வழிந்தோடுகிறது.
இந்த பகுதிகளில் பாதாள சாக்கடை கழிவுநீர், சுத்திகரிப்பு நிலையத்துக்கு செல்லாமல் நேரடியாக நீர்ப்பாசன வாய்க்காலில் விடப்படுகிறது.
தேவா நகர் பகுதியில் பாதாள சாக்கடையில் இருந்து நேரடியாக குழாய் மூலம் கழிவுநீர் பாசன வாய்க்காலில் விடப்படுகிறது. மனிதக் கழிவுகள் பாசன வாய்க்காலில் விடுவது தவறு என தெரிந்தும் அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை பெற்றுக் கொண்ட அதிகாரிகள், ஒரு மாதத்தில் நிரந்தர தீர்வு காணப்படும் என, உறுதி அளித்தனர்.