தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/டெங்கு ஒழிப்பு பணி மெத்தனம்: தி.மு.க., மாஜி எம்.எல்.ஏ., கண்டனம்

டெங்கு ஒழிப்பு பணி மெத்தனம்: தி.மு.க., மாஜி எம்.எல்.ஏ., கண்டனம்

டெங்கு ஒழிப்பு பணி மெத்தனம்: தி.மு.க., மாஜி எம்.எல்.ஏ., கண்டனம்


UPDATED : நவ 26, 2026 07:37 PM

ADDED : நவ 26, 2026 07:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 26, 2026 07:37 PM ADDED : நவ 26, 2026 07:16 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: டெங்கு ஒழிப்பு பணியில் மெத்தனம் காட்டாமல் அரசு சுகாதார பணிகளை முடுக்கிவிட வேண்டும் என முன்னாள் எம்.எல்.ஏ, அனிபால் கென்னடி வலியுறுத்தியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

புதுச்சேரியில் டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்து மாணவிகள் மற்றும் செவிலியர் உட்பட அடுத்தடுத்து உயிரிழப்புகள் ஏற்படுவது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. 1,300-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், நோய்த் தடுப்பு மற்றும் மருத்துவ வசதிகளை ஏற்படுத்துவதில் ஆளும் அரசு மெத்தனமாகச் செயல்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

மக்களின் உயிரோடு விளையாடும் அலட்சியத்தைக் கைவிட்டு, போர்க்கால அடிப்படையில் கொசு ஒழிப்பு மற்றும் சுகாதார பணிகளை அரசு முடுக்கிவிட வேண்டும்.

பொதுமக்கள் அச்சமடையாமல், வீடுகளைச் சுற்றி மழைநீர் மற்றும் கழிவுநீர் தேங்காமல் பார்த்துக் கொண்டு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் சுய மருத்துவம் செய்யாமல், உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us