/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாஜி அமைச்சர் நினைவு நாள் நாளை அனுசரிப்பு
/
மாஜி அமைச்சர் நினைவு நாள் நாளை அனுசரிப்பு
ADDED : நவ 04, 2024 06:14 AM

புதுச்சேரி : முன்னாள் அமைச்சர் கண்ணனின் முதலாமாண்டு நினைவு நாள் அஞ்சலி நிகழ்ச்சி நாளை நடக்கிறது.
புதுச்சேரி அரசியலில் முக்கியத் தலைவராக திகழ்ந்தவர் கண்ணன், சபாநாயகர், அமைச்சர், எம்.பி., என, அரசின் பல்வேறு பொறுப்புகளை வகித்தார். இவர், கடந்தாண்டு 5ம் தேதி கண்ணன் மறைந்தார். அவரது முதலாமாண்டு நினைவு நாள் நிகழ்ச்சி, வைசியாள் வீதியில் உள்ள அவரது இல்லத்தில் நாளை காலை 10:30 மணிக்கு நடக்கிறது.
இது குறித்து அவரது மகன் விக்னேஷ் கண்ணன் அறிக்கை:
புதுச்சேரி மாநில முன்னாள் சட்டசபை தலைவரும் - அமைச்சர், எம்.பி., எனப் பல்வேறு பொறுப்புகளில் மக்களுக்காகப் பணியாற்றியவர் எனது தந்தை கண்ணன். அவர் ஆற்றிய மக்கள் பணிகள் என்றைக்கும் நிலைத்து நின்று அவருடைய புகழை பரப்பி வருகிறது.
அரசியலுக்கும் கட்சிகளுக்கும் அப்பாற்பட்டு என் தந்தை மக்களுக்கான பாடுபட்டார். அவர் மீது அன்பும், அக்கறையும், பாசமும் கொண்ட தொண்டர்கள், விசுவாசிகள், முன்னாள், இன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், அவருடைய தோழமைகள், முதலாமாண்டு நினைவு நாள் நினைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.