/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அடிப்படை வசதிகள் நிறைவேற்ற முன்னாள் எம்.எல்.ஏ., கோரிக்கை
/
அடிப்படை வசதிகள் நிறைவேற்ற முன்னாள் எம்.எல்.ஏ., கோரிக்கை
அடிப்படை வசதிகள் நிறைவேற்ற முன்னாள் எம்.எல்.ஏ., கோரிக்கை
அடிப்படை வசதிகள் நிறைவேற்ற முன்னாள் எம்.எல்.ஏ., கோரிக்கை
ADDED : அக் 20, 2024 05:42 AM

திருபுவனை,: திருபுவனை தொகுதியில் வாய்க்கால்கள் மற்றும் சாலைகளை சீரமைத்து தருமாறு மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜனிடம், முன்னாள் எம்.எல்.ஏ., கோபிகா தலைமையில் என்.ஆர்., காங்., நிர்வாகிகள் கோரிக்கை விடுத்தனர்.
அவர்கள் அளித்த மனுவில், திருபுவனை தொகுதிக்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் மழை நீரினால் பாதிப்பு ஏற்படுவதாக பொதுமக்கள் முன்னாள் எம்.எல்.ஏ., கோபிகாவிடம் முறையிட்டுள்ளனர்.
அதன் அடிப்படையில் திருபுவனை தொகுதிக்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் துார் வாரப்படாமல் உள்ள வடிகால் வாய்க்கால்கள், சேதமடைந்துள்ள சாலைகள் அனைத்தையும் சீரமைக்க வேண்டும்.
தினமும் சேகரமாகும் குப்பைகளையும் தொய்வின்றி அப்புறப்படுத்தி சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.