/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முன்னாள் ராணுவ வீரர்கள் நலச்சங்க ஆண்டு விழா
/
முன்னாள் ராணுவ வீரர்கள் நலச்சங்க ஆண்டு விழா
ADDED : நவ 25, 2024 05:36 AM

புதுச்சேரி : முப்படை முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் வீரத்தாய்மார்கள் நலச்சங்கம் சார்பில் முதலாம் ஆண்டு விழா நேற்று நடந்தது.
லாஸ்பேட்டை விவேகானந்தா மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடந்த விழாவிற்கு, தலைவர் மோகன் வரவேற்றார். விழாவில், சபாநாயகர் செல்வம் கலந்து கொண்டு, முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
விழாவில், எம்.எல்.ஏ.,க்கள் வைத்தியநாதன், அசோக்பாபு ஆகியோர் பங்கேற்று வாழ்த்தி பேசினர். சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில், தகுதி வாய்ந்த முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும். மூன்று மாதத்திற்கு ஒருமுறை முன்னாள் ராணுவ வீரர்கள் குறை கேட்பு கூட்டம் நடத்திட வேண்டும். மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் கேந்திரிய சைனிக் போர்டின் பரிந்துரையின்படி முப்படை நல வாரியத்திற்கு ஒய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஒருவரை நிரந்தர இயக்குனராக நியமிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.