/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முன்னாள் ராணுவ வீரர்கள் சங்க பொதுக்குழு கூட்டம்
/
முன்னாள் ராணுவ வீரர்கள் சங்க பொதுக்குழு கூட்டம்
ADDED : ஏப் 22, 2025 04:39 AM

புதுச்சேரி: முப்படை முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் வீரத் தாய்மார்கள் நலச் சங்கத்தின் பொதுக் குழுக் கூட்டம் அரியாங்குப்பம் காமராஜர் திருமண மண்டபத்தில் நடந்தது.
நலச் சங்கத்தின் தலைவர் மோகன் தலைமை தாங்கினார். உபதலைவர் சுரேஷ்குமார் வரவேற்றார். பொது செயலாளர் செல்வமணி, கடந்த ஓராண்டு சங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார். முன்னாள் ராணுவ வீரர்கள், வீரத்தாய்மார்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. செயலாளர் தவும்னிக் நன்றி கூறினார்.
அமைப்பு செயலாளர் ஜுவானந்தம், இணை செயலாளர் நீலவண்ணன், ஆலோசனக் குழுத் தலைவர் ரமேஷ், செயற்குழு உறுப்பினர்கள் லட்சுமி நாராயணன், சிவ சுப்ரமணியன், குமரகுரு, கவுரவத்தலைவர்கள் வீரமணி, சிவராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், புதுச்சேரி வாழ் முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் விதவைத் தாய்மார்களுக்கு தகுதியின் அடிப்படையில் இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும். மருத்துவக் கல்லுாரிகளில் முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு 3 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.