/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நில மோசடி வழக்கில் கைதான மாஜி சப் கலெக்டர் 5 நாள் காவலில் வைத்து போலீஸ் விசாரணை
/
நில மோசடி வழக்கில் கைதான மாஜி சப் கலெக்டர் 5 நாள் காவலில் வைத்து போலீஸ் விசாரணை
நில மோசடி வழக்கில் கைதான மாஜி சப் கலெக்டர் 5 நாள் காவலில் வைத்து போலீஸ் விசாரணை
நில மோசடி வழக்கில் கைதான மாஜி சப் கலெக்டர் 5 நாள் காவலில் வைத்து போலீஸ் விசாரணை
ADDED : அக் 17, 2024 04:41 AM
காரைக்கால்:' காரைக்கால் மாவட்டம், கோவில்பத்து கிராமத்தில் உள்ள பார்வதீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 8 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் மனையாக மாற்றி விற்க பலரிடம் முன்பணம் பெறப்பட்டது.
இதுகுறித்த புகாரின் பேரில் கவர்னரின் அதிரடி உத்தரவை தொடர்ந்து சீனியர் எஸ்.பி., நேரடியாக விசாரணை மேற்கொண்டார்.
அதில் கிடைத்த தகவலின் பேரில் காரைக்கால் போலீசார் மோசடி உள்ளிட்டபிரிவுகளில் வழக்கு பதிந்து சப் கலெக்டர் ஜான்சன், நில அளவையாளர் ரேணுகாதேவி, டாக்குமென்ட் ரைட்டர் கார்த்திக், இடைத்தரகர்கள் சிவராமன், திருமலை ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அரசு ஊழியர்களான சப் கலெக்டர் ஜான்சன், நில அளவையாளர் ரேணுகாதேவி, சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்த மோசடி வழக்கிற்கு மூளையாக செயல்பட்ட என்.ஆர்.காங்., பிரமுகர் ஜேசிபி ஆனந்த் (எ) ஆனந்தகுமார் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இவ்வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள சப் கலெக்டர் ஜான்சனை 7 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்டு, காரைக்கால் போலீசார் மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி வரதராஜன், ஜான்சனை வரும் 20ம் தேதி வரை ௫ நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து, காரைக்கால் கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜான்சனை, போலீசார் தங்கள் காவலில் எடுத்து வந்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணையை துவக்கி உள்ளனர்.
சப் கலெக்டர் அதிரடி மாற்றம்
புதுச்சேரி வடக்கு சப் கலெக்டர் அர்ஜூன் ராமகிருஷ்ணன் காரைக்கால் சப் கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக கடந்த 7ம் தேதி புதுச்சேரியில் பணியில் சேர்ந்த 2022 ஆண்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக இஷிடாரதி, வடக்கு சப் கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவினை நிர்வாக சீர்த்திருத்த துறை சார்பு செயலர் ஜெய்சங்கர் பிறப்பித்துள்ளார்.