ADDED : மார் 17, 2024 05:30 AM

புதுச்சேரி: லோக்சபா தேர்தலையொட்டி, இ.சி.ஆர்., சாலையில் உள்ள மாநில அவசர செயல்பாட்டு மையத்தில் தேர்தல் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
புதுச்சேரியில் லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, இ.சி.ஆர்., சாலையில் அமைந்துள்ள மாநில அவசர செயல் பாட்டு மையத்தில் பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை அளிப்பதற்கு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
இக்கட்டுப்பாட்டு மையத்தில் தேர்தல் தொடர்பான புகார்களை அளிப்பதற்கான கட்டணமில்லா தொலைபேசி எண் 1950 மற்றும் சி- விஜில் செயலி மூலம் பெறப்படும் புகார்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
இக்கட்டுப்பாட்டு மையத்தினை தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர், மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன், துணை தலைமை தேர்தல் அதிகாரிகள் தில்லைவேல், ஆதர்ஸ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

