/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஊசுடேரி நிரம்பியதால் உபரி நீர் வெளியேற்றம்
/
ஊசுடேரி நிரம்பியதால் உபரி நீர் வெளியேற்றம்
ADDED : நவ 02, 2025 04:13 AM

வில்லியனுார்: ஊசுடேரி நிரம்பியதால், உபரிநீர் வெளியேற்றப்பட்டது.
புதுச்சேரி ஊசுடேரி முழு கொள்ளளவு 3.5 மீட்டர் உயரமாகும். சமீபத்தில் பெய்த கன மழையால் ஊசுடேரிக்கு நீர் வரத்து அதிகரித்தது. மேலும், வீடூர் அணை திறப்பால் ஊசுடேரிக்கு நீர்வரத்து கிடுகிடு என அதிகரித்தது. ஏரியின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வந்தது.
நேற்று முன்தினம் மாலை ஊசுடேரி முழு கொள்ளளவான 3.5 மீட்டர் அளவை எட்டியது. நேற்று மாலை 3.57 மீட்டர் அளவிற்கு நீர்மட்டம் உயர்ந்ததால், பொதுப்பணித்துறை நீர்பாசன கோட்டம் சார்பில், பத்துக்கண்ணு போக்கு வாய்க்கால் மூலம் ஊசுடேரிக்கு வரும் உபரி நீரை, சங்கராபரணி ஆற்றுக்கு திருப்பிவிட முடிவு செய்தனர்.
அதனை தொடர்ந்து பத்துக்கண்ணு சதுக்கம் பகுதியில் போக்கு வாய்க்கால் மதகில் நேற்று இரவு சாய்சரவணன்குமார் எம்.எல்.ஏ., சிறப்பு பூஜைகள் செய்து, மதகை திறந்து வைத்தார்.
பொதுப்பணித்துறை நீர்பாசன கோட்ட உதவி பொறியாளர் லுாயி பிரகாசம், இளநிலைப் பொறியளர் சிரஞ்சீவி உட்பட பலர் பங்கேற்றனர். பத்துக்கண்ணு மதகு வழியாக ஆற்றுக்கு நீர் திருப்பிவிட்டதால், பொதுப்பணித்துறை ஊழியர்கள் ஊசுடேரியை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

