/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிறந்த குழந்தைக்கு சான்றிதழ் வழங்கல்
/
பிறந்த குழந்தைக்கு சான்றிதழ் வழங்கல்
ADDED : நவ 02, 2025 04:15 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் பிறந்த உடனே பிறப்பு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி தனியார் மருத்துவமனையில் நடந்தது.
பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் பெற நகராட்சி அலுவலகங்களில் காத்திருந்து பெறும் சூழல் இருந்து வந்தது. இதனை மாற்ற மத்திய அரசு புதிய செயலியை அறிமுகப்படுத்தி உள்ளது. இதில் புதுச்சேரியும் இணைந்துள்ளது.
இதன் மூலம் குழந்தை பிறந்த 24 மணி நேரத்திலேயே பிறப்புச் சான்றிதழ் பெற முடியும். புதுச்சேரியில் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் ஆன்லைன் மூலமாக 24 மணி நேரத்திற்குள் பெறும் வசதி தொடக்க விழா தனியார் மருத்துவமனையில் நடந்தது.
தனியார் மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு பிறப்புச் சான்றிதழை உள்ளாட்சி துறை இயக்குனர் சக்திவேல் குழந்தைகளின் பெற்றோரிடம் வழங்கினார்.
நிகழ்ச்சியில், துணை இயக்குனர் சவுந்தரராஜன், புதுச்சேரி ஆணையர் கந்தசாமி, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணைய துணை இயக்குனர்கள் சந்திப்ராய், ஹர்னித்மத், புதுச்சேரி மக்கள் தொகை கணக்கெடுப்பு துணை இயக்குனர் ஜெயபாரதி, இயக்குனர் சக்திவேல், குமரன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

