/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் பரிமாற்றம்
/
நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் பரிமாற்றம்
ADDED : செப் 20, 2025 06:55 AM

புதுச்சேரி : சாரதா கங்காதரன் கல்லுாரியில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் பரிமாற்ற நிகழ்ச்சி நடந்தது.
புதுச்சேரி, சாரதா கங்காதரன் கல்லுாரியில், மத்திய அரசின் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம் வழிகாட்டுதலின்படி, முதல் முறையாக நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் பரிமாற்றத் திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, சண்டிகர் மற்றும் புதுச்சேரி மாநில நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள், கலாசார பரிமாற்ற நிகழ்ச்சி நடந்தது.
நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணன் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் பாபு தலைமை தாங்கினார்.
மாநில அளவிலான நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் சதீஷ், நாட்டு நலப்பணி திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளித்தார். இதில், பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் விதமாக மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
பள்ளி அளவிலான நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் கலைவாணி நன்றி கூறினார். ஏற்பாடுகளை நலப்பணித்திட்ட அலுவலர் தண்டபாணி செய்திருந்தார்.
இதில், இரு மாநில நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் சமூக சேவைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் குறித்த அனுபவங்களை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டனர். 20க்கும் மேற்பட்ட கல்லுாரிகளின் 220 நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.