/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உரிமைத்தை புதுப்பிக்காத 15 பார்களுக்கு 'சீல்' வைப்பு கலால் துறை அதிரடி
/
உரிமைத்தை புதுப்பிக்காத 15 பார்களுக்கு 'சீல்' வைப்பு கலால் துறை அதிரடி
உரிமைத்தை புதுப்பிக்காத 15 பார்களுக்கு 'சீல்' வைப்பு கலால் துறை அதிரடி
உரிமைத்தை புதுப்பிக்காத 15 பார்களுக்கு 'சீல்' வைப்பு கலால் துறை அதிரடி
ADDED : ஏப் 02, 2025 05:12 AM

புதுச்சேரி : புதுச்சேரியில் உரிமம் புதுப்பிக்காத 13 ரெஸ்டோ பார்கள் உட்பட 15 பார்களை அதிரடியாக நேற்று 'சீல்' வைத்தனர்.
புதுச்சேரியில் மதுபானங்கள் விலை குறைவாக உள்ளது. இதன் காரணமாகவே வார இறுதி நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் பிராந்தியத்தில் 202 ரெஸ்டோ பார்கள் உட்பட மொத்தம் 356 சில்லரை மதுபான கடைகள் இயங்கி வருகிறது.
இந்த மதுபான கடைகள் இயங்குவதற்கு கலால் துறை சார்பில் ஒவ்வொரு நிதி ஆண்டும் ஏப்ரல் 1ம் தேதி முதல் மார்ச் 31ம் தேதிவரை உரிமம் வழங்கப்படுகிறது. இதற்கு ஒவ்வொரு மதுக்கடையும் ரூ.6 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும். அடுத்த நிதி ஆண்டிற்கு, முதல் நிதி ஆண்டான மார்ச் 31ம் தேதிக்குள் ரூ.6 லட்சத்தை செலுத்தி உரிமத்தை புதுப்பித்து கொள்ள வேண்டும்.
அதன்படி புதுச்சேரி பிராந்தியத்தில் மொத்த முள்ள 356 சில்லரை மதுபானக் கடைகளில் 342 கடைகள் உரிமத்தை புதுப்பித்து கொண்டன.
உரிமத்தை புதுப்பிக்காத 14 ரெஸ்டோ பார்கள் உள்ளிட்ட 15 மதுபான கடைகளுக்கு கலால் துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
அதன்பிறகு மேற்கட்ட 15 கடைகளும் நேற்று முன்தினம்வரை உரிமத்தை புதுப்பிக்கவில்லை.
அதனையொட்டி, கலால் உதவி ஆணையர் மேத்யூஸ் பிராங்ளின் உத்தரவின்பேரில், தாசில்தார் ராஜேஸ்கண்ணன் தலைமையிலான ஊழியர்கள் நேற்று உரிமத்தை புதுப்பிக்காத 14 ரெஸ்டோ பார்கள் உள்ளிட்ட 15 சில்லரை மதுபான கடைகளுக்கு அதிரடியாக 'சீல்' வைத்தனர்.
இந்த கடைகள் உரிமம் புதுப்பிப்பு கட்டணம் ரூ.6 லட்சத்துடன், 10 சதவீதம் அபராத கட்டணம் செலுத்தி, உரிமத்தை புதுப்பித்த பின் திறக்க அனுமதி வழங்கப்படும்.

