/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிறுவர்களுக்கு மது விற்றால்... கலால் துறை எச்சரிக்கை
/
சிறுவர்களுக்கு மது விற்றால்... கலால் துறை எச்சரிக்கை
சிறுவர்களுக்கு மது விற்றால்... கலால் துறை எச்சரிக்கை
சிறுவர்களுக்கு மது விற்றால்... கலால் துறை எச்சரிக்கை
ADDED : செப் 13, 2025 09:06 AM
புதுச்சேரி : பதினெட்டு வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கு மது வினியோகித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலால் துறை எச்சரித்துள்ளது.
இதுகுறித்து கலால் துணை ஆணையர் மேத்யூ பிரான்சிஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
பதினெட்டு வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு மதுபானங்கள் விற்பதாகவும், பார்கள் மற்றும் ஓட்டல்களில் சிறுவர்களுக்கு மதுபானங்கள் பரிமாறப்படுவதாக பல்வேறு தரப்பில் இருந்து புகார்கள் வருகிறது.
கலால்துறை விதிகளின்படி 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கு மதுபானம் விற்பதோ, கொடுப்பதோ குற்றமாகும்.
இதனை உறுதிப்படுத்திட மதுக்கடைகள், பார்கள் மற்றும் ஓட்டல்களின் நுழைவு வாயில்களில், 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கு மது விற்பனை செய்வது 1970ம் ஆண்டு புதுச்சேரி கலால் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும்' என்ற தகவலை உள்ளூர் மொழியிலும் மற்றும் ஆங்கிலத்திலும் காட்சிப்படுத்த வேண்டும்.
இந்த உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.