ADDED : செப் 24, 2024 06:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : புதுச்சேரி மாநில தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் செயற்குழு கூட்டம் உருளையான்பேட்டையில் நடந்தது.
கூட்டத்திற்கு, இயக்கத் தலைவர் பிரகாஷ் தலைமை தாங்கினார். கவுரவத் தலைவர் ஆனந்தன், ஒருங்கிணைப்பாளர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச் செயலாளர் செல்வக்குமார், செயலாளர் கஸ்பர், பொருளாளர் சதீஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
கூட்டத்தில், ராஜ்குமார் பாதுகாப்பு இயக்க தலைவராகவும், குழந்தைராஜ், நகர தலித் மக்கள் பாதுகாப்பு செயலாளராகவும் தேர்தெடுக்கப்பட்டனர். கூட்டத்தில் இயக்க உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இளைஞரணி தலைவர் கபரியேஸ் நன்றி கூறினார்.

