ADDED : மார் 19, 2026 04:36 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: உழவர்கரை தொகுதியில் செலவினக் கண்காணிப்பாளர் ஆய்வு மேற்கொண்டார்.
புதுச்சேரியில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலையொட்டி, தேர்தல் நடைமுறைகளைக் கண்காணிக்கவும், நியாயமான முறையில் தேர்தலை நடத்தவும் 38 மத்தியப் பார்வையாளர்களை இந்தியத் தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
புதுச்சேரியின் 30 சட்டசபை தொகுதிகளுக்கு, பொதுப் பார்வையாளர்களாக 17 பேர், செலவினக் கண்காணிப்பாளர்கள் 17 பேர், காவல் பார்வையாளர்கள் 4 பேர் என, மொத்தம் 38 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் உழவர்கரை மற்றும் வில்லியனுார் தொகுதிகளுக்கு செலவினக் கண்காணிப்பாளராக சீமா தங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர், நேற்று உழவர்கரை தொகுதியில் உள்ள ஓட்டுச்சாவடிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
