ADDED : ஏப் 11, 2026 04:01 AM

நெட்டப்பாக்கம்: மணக்குள விநாயகர் வேளாண் கல்லுாரி மாணவிகள், கரியமாணிக்கம் உழவர் உதவியகத்திற்குட்பட்ட கல்மண்டபம் கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு, கை களையெடுப்பு மற்றும் அவற்றின் முக்கியத்துவங்களை விளக்கும் நிகழ்ச்சி நடந்தது.
கல்லுாரி டீன் முகமது யாசின், ஒருங்கிணைப்பாளர் ராவ் கெலுஸ்கர், திட்ட அலுவலர் திருமலை ஆகியோரின் மேற்பார்வையில் மணக்குள விநாயகர் வேளாண் கல்லுாரி மாணவிகள் விவசாயிகளுக்கு, கை களையெடுப்பு நன்மைகள் குறித்தும், கை களையெடுப்பின் கால நேரம் எதற்காக கை களை எடுக்க வேண்டும். கை களையெடுப்பின் அவசியம் குறித்து கல்லுாரி மாணவிகள் காமேஸ்வரி, ஜெயஸ்ரீ, ஹேமப்பிரியா, இந்துமதி, இஷானி, கமலேஷ்வரி, கவிபிரியா, காவியா, காவியாஞ்சலி, கயல்விழி, கீர்த்தனா ஆகியோர் விளக்கினர். இதில் கல்மண்டபம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்று பயனடைந்தனர்.
