தோட்டக்கலை விளை பொருட்களுக்கான ஏற்றுமதி மதிப்பு கூட்டுதல் பயிற்சி முகாம்
தோட்டக்கலை விளை பொருட்களுக்கான ஏற்றுமதி மதிப்பு கூட்டுதல் பயிற்சி முகாம்
ADDED : ஆக 28, 2026 10:44 PM

புதுச்சேரி: புதுச்சேரி அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை, காலாப்பட்டு பண்ணை தகவல் ஆலோசனை மையம் சார்பில், தோட்டக்கலை விளை பொருட்களுக்கான ஏற்றுமதி வாய்ப்புகள் மற்றும் மதிப்பு கூட்டுதல் பயிற்சி முகாம் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நடந்தது.
வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஆதித்தன் வரவேற்றார். புதுச்சேரி பல்கலைக்கழக உணவு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை பேராசிரியர் சங்கீதா தலைமை தாங்கி, நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். வேளாண் அலுவலர் கோகுலலட்சுமி நோக்கவுரையாற்றினார்.
இப்பயிற்சி முகாமில் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக உணவு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை உதவி பேராசிரியை சங்கமித்ரா கலந்து கொண்டு தோட்டக்கலை பயிர்களில் மதிப்பு கூட்டல் மற்றும் பதப்படுத்துதல் குறித்து செயல்முறை விளக்கம் அளித்தார்.
உதவி பேராசிரியர் சஞ்சீவ் வேளாண் விளைபொருட்களை சந்தைப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி குறித்து விளக்கினார். நிகழ்ச்சியில் காலாப்பட்டு பகுதியை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட உணவு பாதுகாப்பு குழுவை சேர்ந்த மகளிர் மற்றும் உணவு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையை சார்ந்த முதுநிலை, பட்டய படிப்பு மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். ஏற்பாடுகளை செயல் விளக்க உதவியாளர் மாதவன் செய்திருந்தார். இளங்கோ நன்றி கூறினார்.
