/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போலி ஆவணம் மூலம் கோவில் நிலம் அபகரிப்பு
/
போலி ஆவணம் மூலம் கோவில் நிலம் அபகரிப்பு
ADDED : அக் 23, 2024 06:16 AM

காரைக்கால், : காரைக்காலில் கோவில் நிலத்தை போலி ஆவணம் மூலம் பட்டா மாற்றிய வழக்கில், உள்ளாட்சித்துறை இயக்குனர் உட்பட 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.
காரைக்கால் திருநள்ளாறு அடுத்த தக்களூர் கிராமத்தில் திருலோகநாதர் சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான பல ஏக்கர் நிலம் போலியான ஆவணங்கள் மூலம் விற்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. அதையடுத்து திருநள்ளார் போலீசார் விசாரித்தனர். இதில் திருலோகநாத சுவாமி கோவில் நிலம் 2 ஏக்கர் கடந்த 2008ம் ஆண்டு திருநள்ளாறு சார்பதிவாளர் அலுவலகத்தில் நித்தியானந்தம், திருநள்ளாறு வட்டார காங்., தலைவர் சிவக்குமார்,57; ஆகியோர், அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி போலி உயில் மூலம் பத்திரப்பதிவு செய்துள்ளது தெரிய வந்தது. நித்தியானந்தனை போலீசார் கைது செய்தனர். சிவக்குமார் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக, புதுச்சேரி உள்ளாட்சித் துறை இயக்குனர் சக்திவேல், ஓய்வுபெற்ற தாசில்தார் ராஜகோபால், உதவி தாசில்தார் குருபாதம் ஆகிய 3 பேருக்கு திருநள்ளாறு போலீசார் நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.
சக்திவேல் உள்ளிட்ட மூவரிடமும் திருநள்ளாறு போலீஸ் ஸ்டேஷனில் நேற்று எஸ்.பி., பாலச்சந்தர் தலைமையில் விசாரணை நடத்தினர்.
கோவில் நில மோசடி வழக்கில், உள்ளாட்சிதுறை இயக்குனர் உள்ளிட்ட மூன்று அதிகாரிகளிடம் போலீசார் விசாரணை செய்த சம்பவம் பரப்பபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

