/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு
/
பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு
ADDED : ஜூலை 25, 2025 02:37 AM
புதுச்சேரி: கூடுதல் வேளாண் இயக்குநர் ஜாகீர் உசைன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
புதுச்சேரி, காரைக்கால் விவசாயிகள் தற்போது சாகுபடி செய்துள்ள சொர்ணவாரி, குறுவை நெற்பயிரை பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீடு செய்வதற்கு, கடந்த 15ம் தேதி கடைசி நாள் என அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், விவசாயிகள் பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவேற்றம் செய்ய முடியாததால், வரும் 31ம் தேதி வரை பதிவு செய்ய கால அவகாசத்தை நீட்டித்துள்ளது. விவசாயிகள் காலதாமதமின்றி, தங்கள் பகுதியில் செயல்படும் பொது சேவை மையங்கள் மூலமாக பதிவு செய்துகொள்ளலாம். மேலும், தேசிய பயிர் காப்பீடு இணைய தளம் என்.சி.ஐ.பி. போர்டல் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.