/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வேளாண் தொழிலாளர் நலச்சங்கத்தில் உறுப்பினர்கள் சேர காலக்கெடு நீட்டிப்பு

ADDED : நவ 01, 2025 02:10 AM
புதுச்சேரி: வேளாண் தொழிலாளர்கள் நலச்சங்கத்தில் உறுப்பினர்களாக சேர காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வேளாண் தொழிலாளர் நலச் சங்க தலைமை செயல் அலுவலர் முத்துகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
புதுச்சேரி அரசின் வேளாண் தொழிலாளர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
வேளாண் தொழிலாளர்கள் இந்த நலத்திட்டங்களை பெறுவதற்கு வேளாண் தொழிலாளர் நலச்சங்கத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்து இருத்தல் அவசியமாகிறது.
தற்போது வேளாண் தொழிலாளர்கள் பதிவு செய்து கொள்ளுவதற்காக வேளாண் துறையின் உழவர் உதவியங்கள் மூலமாக விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. வேளாண் தொழிலாளர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடந்த 29 ம் தேதி இறுதி காலக்கெடு அளிக்கப்பட்டது.
இந்த காலக்கெடு அடுத்த மாதம் 10ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.