/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மானிய விலையில் மீன்பிடி படகுகள் மாற்றுவதற்கான காலக்கெடு நீட்டிப்பு
/
மானிய விலையில் மீன்பிடி படகுகள் மாற்றுவதற்கான காலக்கெடு நீட்டிப்பு
மானிய விலையில் மீன்பிடி படகுகள் மாற்றுவதற்கான காலக்கெடு நீட்டிப்பு
மானிய விலையில் மீன்பிடி படகுகள் மாற்றுவதற்கான காலக்கெடு நீட்டிப்பு
ADDED : ஜூலை 18, 2025 04:36 AM
புதுச்சேரி: மானிய விலையில் மீன்பிடி படகுகளை மாற்றுவதற்கான காலக்கெடுவை, மீன்வளத்துறை நீட்டித்துள்ளது.
இதுகுறித்து, மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை இயக்குனர் முகமது இஸ்மாயில் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:
2025ம் நிதியாண்டில், புதுச்சேரியை சார்ந்த மீன வர்களுக்கு, கண்ணாடி நுண்ணிழை கட்டுமரம், இயந்திரமில்லா கண்ணாடி நுண்ணிழை கட்டுமரம், 50 சதவீதம் மானிய விலையில் வழங்கபடுகிறது.
இதில், பதிவு செய்யப்பட்ட வெளிப்புற இயந்திரம் பொருத்தப்பட்ட பைபர் மீன்பிடி படகுகளுக்கு 50 சதவீதம் மானிய விலையில் மாற்றுவதற்கான திட்டத்தின் கீழ், விண்ணப்பங்கள் அளிக்க கடந்த மாதம் 4ம் தேதி, நாளிதழ் மூலமாக கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.
அதில், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, இம்மாதம் 5ம் தேதிக்குள் மீன்வளத்துறை அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு கூறப்பட்டிருந்தது.
இதில், மீனவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கும் தேதி வரும் 25ம் தேதி வரை நீட்டிக்கப்பட் டுள்ளது.
எனவே இத்திட்டத்தில் பயன்பெற விருப்பமுள்ளவர்கள், மீனவர் கூட்டுறவு சம்மேளனத்தில் இருந்து விண்ணப்பத்தை பெற்று கொள்ளலாம்.
பூர்த்தி செய்த, விண்ணப்பத்தில் இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்களுடன், தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் உள்ள மீன்வளத்துறை இயக்குனர் அலுவலகத்தில் 25ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.