தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் எக்ஸ்ட்ரூஷன் மையம் திறப்பு

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் எக்ஸ்ட்ரூஷன் மையம் திறப்பு

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் எக்ஸ்ட்ரூஷன் மையம் திறப்பு


ADDED : மார் 29, 2025 03:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 29, 2025 03:55 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் உணவு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் புதிய எக்ஸ்ட்ரூஷன் மையம் திறப்பு விழா நடந்தது.

பல்கலைக்கழக துணை வேந்தர் பிரகாஷ் பாபு எக்ஸ்ட்ரூஷன் தொழில் நுட்ப மையத்தை திறந்து வைத்தார்.

அப்போது, மகளிர் தொழில் முனைவோர், விவசாயிகள் மற்றும் வேலை வாய்ப்பில்லாத இளைஞர்களுக்கு வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்குவதில், புதுமைகளை ஊக்குவிப்பதில் நகர்ப்புற மற்றும் கிராமப்புற சமூகங்களில் நிலையான வளர்ச்சியை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும்' என்றார்.

பல்கலைக்கழக பதிவாளர் (பொ) ரஜ்நீஷ் பூத்தானி, தொழில்நுட்ப மையத்தின் செயல்பாடுகள் மற்றும் சமூகத்தில் ஏற்படுத்தும் நேர்மறையான தாக்கங்களை விளக்கினார். பேராசிரியர்கள் தரணிக்கரசு, ஜோசப் செல்வின் ஆகியோர் தொழில் முனைவு, மற்றும் இளைஞர் தலைமுறையில் எக்ஸ்ட்ரூஷன் முக்கியத்துவம் குறித்து பேசினர்.

இந்த எக்ஸ்ட்ரூஷன் உபகரணங்கள் பல புதுமையான தயாரிப்புகளை உருவாக்க உதவுகிறது. பல்கலைக்கழகத்தின் இந்த புதிய வசதி, சிறிய அளவிலான உணவு தொழில்முனைவோர் மற்றும் விவசாயிகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அவர்களின் உற்பத்தித் திறன் மற்றும் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க பெரும் உதவியாக இருக்கும். விழாவில், 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். இதில், ​​மாணவர்களின் பல்வேறு புதிய தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us