ADDED : ஜூன் 23, 2025 04:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : புதுச்சேரி மூத்த குடிமக்கள் நல வாழ்வு சங்கம் சார்பில், நடந்த கண் பரிசோதனை முகாமில், உறுப்பினர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
புதுச்சேரி மூத்த குடிமக்கள் நல வாழ்வு சங்கம் சார்பில், ஆண்டு தோறும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, அரவிந்தர் கண் மருத்துவமனையுடன் இணைந்து,புஸ்சி வீதியில் உள்ள அரவிந்தர் கண் மருத்துமனை சிட்டி, சென்டரில், கண் பரிசோதனை முகாமை நேற்று நடத்தியது.
முகாமில், சங்க தலைவர் வேணுகோபால், செயலாளர்கள் கிருஷ்ணராஜ், செல்வராஜ், பொருளாளர் ராமலிங்கம் உட்பட சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், உறுப்பினர்களுக்கு சிறப்பு மருத்துவர் கண் பரிசோதனை செய்து, ஆலோசனை வழங்கினார்.