/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கண் நீர் அழுத்த நோய் பரிசோதனை முகாம்
/
கண் நீர் அழுத்த நோய் பரிசோதனை முகாம்
ADDED : மார் 13, 2024 06:50 AM

புதுச்சேரி : லட்சுமிநாராயணா மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் இலவச கண் நீர் அழுத்த நோய் பரிசோதனை முகாம் நடக்கிறது.
மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை சார்பில், கண் நீர் அழுத்த நோய் பரிசோதனை கடந்த 10ம் தேதி துவங்கியது. இந்த முகாமை, மருத்துவ கண்காணிப்பாளர் அசையாஸ் போஸ்கோ சந்திரகுமார் மற்றும் துணை மருத்துவ கண்காணிப்பாளர் கலாஸ்ரீ ஆகியோர் துவக்கி வைத்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை, கண் மருத்துவ துறை பேராசிரியை கலைச்செல்வி, டாக்டர்கள் அபிராமி, தாரிணி, பாத்திமா மற்றும் முதுநிலை மருத்துவ மாணவர்கள் செய்திருந்தனர்.
இம்முகாமில் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டு கண் பரிசோதனை செய்து மருத்துவர்களின் ஆலோசனை பெற்றனர். இந்த முகாம், 16ம் தேதி நிறைவு பெறுகிறது.

