கண் தொழில்நுட்ப வல்லுநர் சங்கம் ஒரு நாள் விடுப்பு போராட்டம்
கண் தொழில்நுட்ப வல்லுநர் சங்கம் ஒரு நாள் விடுப்பு போராட்டம்
UPDATED : அக் 13, 2026 04:14 PM
ADDED : அக் 13, 2026 03:56 PM

புதுச்சேரி.அக்.14–: கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு கண் தொழில்நுட்ப வல்லுநர் சங்கம் சார்பில் ஒரு நாள் விடுப்பு போராட்டம் நேற்று நடந்தது.
புதுச்சேரி அரசு கண் தொழில்நுட்ப வல்லுநர் சங்கம் சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் விடுப்பு போராட்டம் அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் நேற்று நடந்தது. அரசு ஊழியர்களின் மத்திய கூட்டமைப்பின் தலைவர் வெங்கடேசன், பொதுச் செயலாளர் லட்சுமணமசாமி ஆகியோர் தலைமை தாங்கினர். சுகாதார ஊழியர்களின் கூட்டமைப்பின் தலைவர் அரிகரன், பொதுச் செயலாளர் பிரபாத் முன்னிலை வகித்தனர்.
போராட்டத்தில், காலியாக உள்ள கண் தொழில்நுட்ப வல்லுநர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். உரிய ஊதிய விகிதத்தை அமல்படுத்த வேண்டும். நிலுவையில் உள்ள கண் தொழில்நுட்ப பணியாளர் சேர்ப்பு விதிகளை உடனடியாக திருத்த வேண்டும். பணியாளர் பற்றாக்குறை சரி செய்த பின்னரே , இடமாற்றம் செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
சங்க செயலாளர் காசிநாதன், துணை செயலாளர் ஆதிமூலம் ஆகியோர் போராட்ட ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
