/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாலை விபத்தில் இறந்த சிற்பியின் கண்கள் தானம்
/
சாலை விபத்தில் இறந்த சிற்பியின் கண்கள் தானம்
ADDED : ஜூலை 12, 2025 03:26 AM

புதுச்சேரி: சாலையில் விபத்தில் இறந்த சிற்பியின் கண்கள், அரசு கண் வங்கிக்கு தானமாக வழங்கப்பட்டது.
முத்திரையர்பாளையம், விவேகானந்தர் வீதியை சேர்ந்தவர் பழனி, 63; சிற்பி. இவர், கடந்த 10 நாட்களுக்கு முன், சாலை விபத்தில் சிக்கி, காயமடைந்து, சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.
இதையடுத்து, அவரது மனைவி கீதா, மகள்கள் சரண்யா, கஜலட்சுமி, சுமித்ரா மற்றும் குடும்பத்தினரிடம் பன்னாட்டு மனித உரிமைகள் பேரவை நிர்வாகிகள் பேசி, இறந்த பழனியின் கண்களை தானமாக வழங்க ஒப்புதல் பெற்றனர்.
பின், அரசு கண் வங்கி கவுன்சிலிங் அதிகாரி சுந்தரவல்லி தலைமையிலான மருத்துவக் குழுவினர் பழனியின் கண்களை அறுவை சிகிச்சை மூலம் தானமாக பெற்றனர்.
தொடர்ந்து, உடல்தானம் பதிவு ஆலோசகர் கந்தசாமி, பேரவை தலைமை இணை பொது செயலாளர் கலிவரதன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.