/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பட்டுபோன மரத்தால் விபத்து அபாயம்
/
பட்டுபோன மரத்தால் விபத்து அபாயம்
ADDED : ஆக 12, 2025 01:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர்: பாகூர் மாஞ்சாலை ரோட்டில் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இந்த சாலையையொட்டி உள்ள சித்தேரி வாய்க்கால் கரையில் இருந்த மாமரம் பட்டு போன நிலையில்,
அதன் கிளைகள் காய்ந்து ஒவ்வொன்றாக உடைந்து விழுந்து வருகிறது. இதனால், அவ்வழியே செல்லும் பொது மக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். தற்போது, அடிக்கடி சூறைக்காற்றுடன் திடீர் மழை பெய்து வருவதால், இந்த மரம் எந்த நேரமும் உடைந்து விழும் நிலையில் உள்ளது. எனவே, பொது மக்களின் நலன் கருதி, பாகூர் மாஞ்சாலை ரோட்டில் உள்ள பட்டு போன மரத்தை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.