
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், புதுச்சேரியில் சிமென்ட் சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பாரதி வீதி, செயின்தெரேஸ் வீதி உள்ளிட்ட வீதிகளில் தார் சாலைகள் அகற்றப்பட்டு, உயரமாக சிமென்ட் சாலைகள் போடப்பட்டுள்ளது. சாலை அமைக்க தோண்டும் போது, சாலையோரத்தில் இருந்த மரங்களில் வேர் பகுதியில் மண் எடுக்கப்பட்டது. அதனால், மர வேர்களில் பிடிப்பு இல்லாமல், மரங்கள் சாலை குறுக்கே சாய்ந்து நிலையில் உள்ளது.
பாரதி வீதி, செயின்தெரேஸ் வீதியில் எந்த நேரத்திலும், மரம் சாலையில் விழும் நிலையில் உள்ளதால், அந்த வழியாக, பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் செல்வதால், பெரிய ஆபத்து ஏற்படுவதற்குள் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தவேண்டும்.