/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆட்டுக்கறி வாங்கி ரூ.23 லட்சம் மோசடி; பிரபல பிரியாணி கடை உரிமையாளர் கைது
/
ஆட்டுக்கறி வாங்கி ரூ.23 லட்சம் மோசடி; பிரபல பிரியாணி கடை உரிமையாளர் கைது
ஆட்டுக்கறி வாங்கி ரூ.23 லட்சம் மோசடி; பிரபல பிரியாணி கடை உரிமையாளர் கைது
ஆட்டுக்கறி வாங்கி ரூ.23 லட்சம் மோசடி; பிரபல பிரியாணி கடை உரிமையாளர் கைது
ADDED : ஜன 05, 2025 05:16 AM

புதுச்சேரி:   ஆட்டிறைச்சி வாங்கி, ரூ.23 லட்சம் மோசடி செய்த, 'யா மொய்தீன் பிரியாணி' கடை உரிமையாளரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புதுச்சேரி மூலகுளம், ரங்கா நகரை சேர்ந்தவர் போலாசா,54; மேட்டுப்பாளையத்தில் 'மாலிக் பாய் மட்டன் சப்ளை' கடை நடத்தி வருகிறார். இவரை கடந்த 2019ம் ஆண்டு தொடர்பு கொண்ட கொசப்பாளையம், டி.ஆர்.நகர், 4வது குறுக்கு தெருவை சேர்ந்த சேதுராமன் மகன் பாலச்சந்திரன், அவரது மனைவி ரம்யா ஆகியோர், புதுச்சேரி இந்திரா சிக்னல் மற்றும் பல இடங்களில் பல்லாவரம் 'யா மொய்தீன் பிரியாணி' கடை துவங்க உள்ளதால், ஆட்டிறைச்சி வழங்கும்படி கூறினர்.
விழுப்புரத்திலும் பிரியாணி கடை கிளையை துவங்கியுள்ளதாக கூறி, அதற்கும் ஆட்டிறைச்சி வழங்கும்படி கேட்டுக் கொண்டார். ஆட்டு இறைச்சி வாங்கியதில், ரூ. 23 லட்சம் நிலுவை ஏற்பட்டது.
போலாசா பணத்தை கேட்டபோது, தமிழகத்தில் மேலும் சில கிளைகள் திறக்க உள்ளதாகவும், அதற்கும் நீங்கள் தான் ஆட்டு இறைச்சி கொடுக்க வேண்டும் என ஆசை வார்த்தை கூறினர்.
அதனை நம்பி, தொடர்ந்து ஆட்டு இறைச்சி கொடுத்து வந்தார். பாலச்சந்திரன் கூறியபடி, சமீபத்தில் புதுச்சேரி அண்ணா சாலையிலும், 'யா மொய்தீன் பிரியாணி' கடை திறக்கப்பட்டது. கடந்த மாத இறுதியில் நிலுவை தொகையை போன் செய்து கேட்டபோது, பாலச்சந்திரன் சரியாக பதில் கூறவில்லை.
டி.ஆர்.நகரில் உள்ள வீட்டிற்கு சென்று பணத்தை கேட்ட போலாசாவிற்கு, பாலசந்தர் மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்து போலாசா அளித்த புகாரின் பேரில், பாலச்சந்திரன்,  மனைவி ரம்யா, தந்தை சேதுராமன் ஆகியோர் மீது மோசடி வழக்கு பதிவு செய்த ரெட்டியார்பாளையம் போலீசார், பாலச்சந்திரனை நேற்று கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

