தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மழலையர்களுக்கான ஆடம்பர ஆடை அலங்காரப் போட்டி

மழலையர்களுக்கான ஆடம்பர ஆடை அலங்காரப் போட்டி

மழலையர்களுக்கான ஆடம்பர ஆடை அலங்காரப் போட்டி


UPDATED : ஆக 11, 2026 10:11 PM

ADDED : ஆக 11, 2026 07:21 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 11, 2026 10:11 PM ADDED : ஆக 11, 2026 07:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: ரெட்டியார்பாளையம் பிரசிடென்சி மேல்நிலைப் பள்ளியில் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மழலையர்களுக்கான ஆடம்பர ஆடை அலங்காரப் போட்டி விழா நடந்தது.

விழாவிற்கு, பள்ளி தாளாளர் கிறிஸ்டிராஜ், தலைமை தாங்கி, சுதந்திர போராட்டம் குறித்து பேசினார். இதில், பள்ளியின் மழலையர்கள் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தலைவர்களின் வேடமிட்டு கலந்து கொண்டனர்.

பிரசிடென்சி பள்ளி குழுமத்தின் செயலாளர் கவுதம் பிரசிடென்சி(எலைட்) பள்ளியின் துணை முதல்வர் ஜான்பால் ஆகியோர் போட்டி நடுவர்களாக செயல்பட்டனர்.

போட்டியில், எல்.கே.ஜி. பிரிவில் வகுப்பில் சிவகுரு, அக்ஷயா முதல் பரிசும், பவிக்ஷா, வருணிகா இரண்டாம் பரிசும், அசல் ஃப்ரா, வெற்றிவேல் பாண்டியன் மூன்றாம் பரிசும் பெற்றனர். யு.கே.ஜி. பிரிவில் மித்ரன், சுதிக்ஷா முதல் பரிசும், ஜெய்லன், வானியன் இரண்டாம் பரிசும், சுசைனா, லோமித்தா மூன்றாம் பரிசும் வென்றனர்.

வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி துணை முதல்வர் ஆரோக்யதாஸ் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us