தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மாணவர்களிடம் ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்: பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம் காட்டம் 

மாணவர்களிடம் ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்: பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம் காட்டம் 

மாணவர்களிடம் ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்: பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம் காட்டம் 


UPDATED : ஆக 11, 2026 10:03 PM

ADDED : ஆக 11, 2026 07:31 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 11, 2026 10:03 PM ADDED : ஆக 11, 2026 07:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: ராகுல் சுயலாப அரசியல் மட்டுமே செய்ய விரும்புவதாக பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம் தெரிவித்தார்.

அவர், கூறியதாவது,

ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் போராடிய மாணவர்களை பயங்கரவாதிகள் தாக்குவதுபோல, ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்., கூட்டணி அரசு தாக்கியுள்ளது. இதை பா.ஜ., கண்டிக்கிறது.

'நீட்' தேர்வில் தவறு நடந்தது தெரிந்ததும் மத்திய அரசு அத் தேர்வை ரத்து செய்துவிட்டு மறுத்தேர்வுக்கு உத்தரவிட்டது. இது தொடர்பாக மாணவர்கள் டில்லியில் போராட்டம் நடந்தபோது, கடும் சட்டத்தையும் மத்திய அரசு நிறைவேற்றியது.

இந்த போராட்டத்துக்கு குரல்கொடுத்த நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், மாணவர்களின் நலனுக்காக பாடுபடுவதாக கூறி கொள்கிறார். இவர், ஜார்க்கண்டில் நடந்தப் போராட்டத்திற்கு எந்த கருத்தும் கூறவில்லை. இதற்கு மாணவர்கள் மத்தியில் ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும். ராகுல் சுயலாப அரசியல் மட்டுமே செய்ய விரும்புகிறார்.

சுதந்திர தினம் கொண்டாடும் தருணத்தில் இதுபோன்ற பிரச்னைகளை உண்டாக்கி மேலிட காங்., தலைவரும், புதுச்சேரி தலைவரும் தவறான தகவலை மக்களுக்கு தெரிவிக்கின்றனர்.

'நீட்' தேர்வு காங்., ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்டது. அதை மத்திய பா.ஜ., அரசு செம்மைப்படுத்தியது. வெளிநாடுகளில் இருந்து நிதி பெறும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மீது எந்த நடவடிக்கையும் பா.ஜ., அரசு எடுக்கவில்லை.

எந்த காரணத்துக்காக வெளிநாடுகளில் இருந்து நிதி பெறப்படுகிறது என்பதையும், நிதியை முறையாக பயன்படுத்த வழிவகை செய்யும் சட்டத்தையே மத்திய அரசு நிறைவேற்றியது' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us