sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஆம்னி பஸ்களில் கட்டணம் உயர்வு

ஆம்னி பஸ்களில் கட்டணம் உயர்வு

ஆம்னி பஸ்களில் கட்டணம் உயர்வு


ADDED : அக் 31, 2024 05:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 31, 2024 05:50 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : தீபாவளி பண்டிகையொட்டி, ஆம்னி பஸ்களில், கட்டணம் அதிகமாக இருந்ததால், பொதுமக்கள் அதிர்ச்சிடைந்தனர்.

புதுச்சேரியில், தமிழகம் மற்றும் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் பல்வேறு இடங்களில் வேலை செய்து வருகின்றனர்.

தீபாவளி பண்டிகையொட்டி, தொடர் விடுமுறையால், அவரவர் சொந்த ஊருக்கு புறப்பட்டனர். புதுச்சேரியில் இருந்து மற்ற பகுதிகளுக்கு செல்ல பொதுமக்கள் ரயிலை விட பஸ்சை நம்பியுள்ளனர்.

இந்நிலையில், தீபாவளியையொட்டி, ஆம்னி பஸ்களில் கட்டணம் அதிகமாக உயர்ந்துள்ளது. புதுச்சேரியில் இருந்து, திருநெல்வேலிக்கு வழக்கமான கட்டணம் 900 முதல், 1,300 ரூபாய் வரை இருக்கும். ஆனால், பண்டியையொட்டி, 2,500 முதல், 6,000 ஆயிரம் வரையும், அதே போல, மதுரைக்கு, வழக்கமான நாட்களில், 600 முதல், 900 வரை இருக்கும். ஆனால், தீபாவளியையொட்டி, 2,000 முதல், 3,500 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டதால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.

மேலும், கர்நாடக அரசு சிறப்பு பஸ்சில், பெங்களூரு செல்ல 1,500 ரூபாயை கட்டணம் வசூல் செய்யப்பட்டது.

பண்டிகையொட்டி ஆம்னி பஸ்களில் கட்டணம் அதிகமாக இருந்ததால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us