UPDATED : அக் 02, 2026 12:00 AM
ADDED : அக் 01, 2026 07:58 PM
அ நிறம் | அளவு
அரியாங்குப்பம்: மது போதையில் மாடியில் இருந்து விழுந்த விவசாயி இறந்தார்.
புதுச்சேரி அடுத்த பெருங்களூர் அருகில் உள்ள தனத்துமேடு பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி, 33; விவசாயி. அதே பகுதியை சேர்ந்த ஒருவருடன் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் தவளக்குப்பம் தானாம்பாளையம் பகுதியில் கோழி வாங்க சென்றனர்.
அந்த பகுதியில் தெரிந்தவர் வீட்டு மாடியில் ரங்கசாமி அவருடன் வந்தவரும் மது குடித்தனர். இதில், நிலை தடுமாறிய ரங்கசாமி மாடியில் இருந்து கீழே விழுந்தார். பலத்த காயமடைந்த ரங்கசாமியை புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி ரங்கசாமி இறந்தார்.
தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
