தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்

உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்

உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்


ADDED : செப் 10, 2026 04:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 10, 2026 04:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

 : புதுச்சேரி: உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு நிதியுதவி பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 

 இதுகுறித்து, வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை, கூடுதல் வேளாண் இயக்குநர் ஜெயசங்கர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:

புதுச்சேரி அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பில் 2026–27ம் நிதியாண்டில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தின் மூலம் தகுதி வாய்ந்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது.

அதில், ஒரு முறை நிதியுதவியாக தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட உள்ளது . பயிறு வகைகள், சிறுதானியங்கள் மற்றும் கரும்பு மதிப்பு கூடுதல் நிறுவனம் அமைந்திட 35 சதவீத மானியம் அல்லது 10 லட்சம் ரூபாய் மிகாமல் வழங்கப்படும். 

பேக்கேஜிங் மற்றும் வர்த்தக முத்திரை உருவாக்குதல் (பிராண்டிங்) ஆகியவற்றிற்கு ஒருமுறை நிதியுதவியாக 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும். 

உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் நிலையான சுய நிர்வாக அமைப்புகளாக செயல்படவும், உழவர்களுக்கான சேவைகளை திறம்பட வழங்கவும் இந்த திட்டம் உதவியாக இருக்கும். நிதியுதவி பெறுவதற்கான விண்ணப்பங்களை தகுதியுள்ள உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், கூடுதல் வேளாண் இயக்குநர் அலுவலகத்தை அணுகி பெற்றுக்கொள்ளலாம். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அடுத்த மாதம் 23ம் தேதி மாலை 5:00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us