/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வாய்க்கால் துார்வாரும் பணி விவசாயிகள் குற்றச்சாட்டு
/
வாய்க்கால் துார்வாரும் பணி விவசாயிகள் குற்றச்சாட்டு
வாய்க்கால் துார்வாரும் பணி விவசாயிகள் குற்றச்சாட்டு
வாய்க்கால் துார்வாரும் பணி விவசாயிகள் குற்றச்சாட்டு
ADDED : நவ 01, 2024 05:51 AM

பாகூர்: கீழ்பரிக்கல்பட்டு கிராமத்தில் வாய்க்கால் துார்வாரும் பணி முறையாக நடைபெறவில்லை விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மழை கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பாகூர் பகுதியில் வடிகால் வாய்க்கால்கள் துார்வாரும் பணி நடைபெற்று வருகிறது.
ஆனால், பல இடங்களில் வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் பொதுப்பணித்துறை வளைந்து கொடுப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.
குறிப்பாக, கீழ்பரிக்கல்பட்டு ஏரிக்கு செல்லும் சுமார் 1400 மீட்டர் நீளமும், 13 மீட்டர் அகலமும் கொண்ட வெள்ளவாரி வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் இருப்பதாக விவசாயிகள் புகார் கூறுகின்றனர்.
இதில், குருவிநத்தம் - முள்ளோடை ரோடு சந்திப்பில் இருந்து கீழ்பரிக்கல்பட்டு கிராம எல்லை வரை சுமார் 500 மீட்டர் நீளம் கொண்ட வாய்க்காலில், 100 மீட்டர் நீளத்திற்கு வாய்க்காலின் கரையை ஆக்கிரமித்து தனி நபர் விவசாயம் செய்து வருவதால், வாய்க்கால் மற்றும் இரண்டு பக்க கரைகளை சேர்த்து 50 அடி இருக்க வேண்டிய இடத்தில், 20 அடியாக வாய்க்கால் சுருங்கி விட்டது.
இதனால், பெரு மழை காலங்களில் வயல்வெளியில் இருந்து வெள்ள நீர் வடிவதில் சிக்கல் ஏற்படும். எனவே, கீழ்பரிக்கல்பட்டு கிராமத்தில், வாய்க்கால் துார்வாரும் பணியினை உரிய முறையில் மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.