/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தோட்டக்கலை மானியம் பெற விவசாயிகள் பெயர் பட்டியல் ஆட்சேபனை இருப்பின் தெரிவிக்கலாம்
/
தோட்டக்கலை மானியம் பெற விவசாயிகள் பெயர் பட்டியல் ஆட்சேபனை இருப்பின் தெரிவிக்கலாம்
தோட்டக்கலை மானியம் பெற விவசாயிகள் பெயர் பட்டியல் ஆட்சேபனை இருப்பின் தெரிவிக்கலாம்
தோட்டக்கலை மானியம் பெற விவசாயிகள் பெயர் பட்டியல் ஆட்சேபனை இருப்பின் தெரிவிக்கலாம்
ADDED : ஜூலை 11, 2025 04:04 AM
புதுச்சேரி: தோட்டக்கலை மானியம் பெற விண்ணப்பித்துள்ள விவசாயிகளின் பெயர் பட்டியலில், ஆட்சேபனை இருப்பின் வரும் 18ம் தேதிக்குள் எழுத்து பூர்வமாக தெரிவிக்குமாறு வேளாண் துறை கேட்டுக்கொண்டுள்ளது.
இணை வேளாண் இயக்குநர் (தோட்டக்கலை) சண்முகம் செய்திக்குறிப்பு;
புதுச்சேரி அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை தோட்டக்கலை அலுவலகம் மற்றும் புதுச்சேரி மாநில தோட்டக்கலை வளர்ச்சி சங்கம் வாயிலாக புதிய பழத்தோட்டம் அமைத்தல், பாரம்பரிய மலர்கள், கட்டை வாழை, மஞ்சல், வீரிய ஒட்டு ரக காய்கறிகள் பயிர் செய்வோர், மூடாக்குகள் போன்றவைகளை சாகுபடி செய்யும், செயல்படுத்தும் விவசாயிகளுக்கு பயிர் சாகுபடிக்கு பிந்தைய மானியத் தொகை அவரது வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது.
மேலும், இயற்கை வேளாண்மை திட்டத்தில் மண்புழு உரதொட்டி அமைப்பதற்கும் பிந்தைய மானியம் வழங்கப்படுகிறது. இந்த வருடம் தைப்பட்டம் 2025ல் தோட்டக்கலைப் பயிர் சாகுபடி செய்து விண்ணப்பித்த விவசாயிகளின் பெயர் பட்டியல், மற்றும் இயற்கை வேளாண்மை திட்டத்தில் மண்புழு உரதொட்டி அமைக்க தேர்வு செய்யப்பட்டவரின் பெயர் பட்டியல் சமுதாய தணிக்கை செய்வதற்காக, புதுவை பிராந்தியத்தின் சம்பந்தப்பட்ட உழவர் உதவியகங்களின் அறிவிப்பு பலகையில் கடந்த 09.07.2025ம் தேதி முதல் வரும் 18.07.2025ம் தேதி வரை ஒட்டப்பட்டுள்ளது.
மேலும், புதுச்சேரி வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையதளத்திலும் (https://agri.py.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. இப்பட்டியலில் ஆட்சேபனை இருப்பின் வரும் 18ம் தேதிக்குள் புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் (தோட்டக்கலை) அலுவலகத்தில் எழுத்து பூர்வமாக தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.