/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வெள்ளம் வந்தும் பலனில்லை 20 கிராம விவசாயிகள் வேதனை
/
வெள்ளம் வந்தும் பலனில்லை 20 கிராம விவசாயிகள் வேதனை
வெள்ளம் வந்தும் பலனில்லை 20 கிராம விவசாயிகள் வேதனை
வெள்ளம் வந்தும் பலனில்லை 20 கிராம விவசாயிகள் வேதனை
ADDED : அக் 24, 2025 03:04 AM

புதுச்சேரி: செல்லிப்பட்டில் படுகை அணை கட்டாததால், சங்கராபரணி ஆற்றில் பெருக்கெடுத்து வரும் தண்ணீர் வீணாக ஓடி கடலில் கலப்பதை கண்டு விவசாயிகள் வேதனை அடைந்து வருகின்றனர்.
பிள்ளையார்குப்பம் - செல்லிப்பட்டு இடையே சங்கராபரணி ஆற்றின் குறுக்கே பிரஞ்சுக்காரர்கள் காலத்தில் 1906ம் ஆண்டு படுகை அணை கட்டப்பட்டது.
பழமையான இந்த படுகை அணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரின் மூலம் சுற்றுவட்டார பகுதியில் பல நுாறு ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன. உரிய பராமரிப்பு இல்லாததால் கடந்த 2021ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில், படுகை அணை உடைந்ததால், பல்லாயிரம் கனஅடி நீர் வேளியேறி வீணாக கடலில் சென்று சேர்ந்தது.
அதன் அருகிலேயே புதிதாக படுகை அணை கட்ட அரசு இருமுறை கோரிய டெண்டர் நிர்வாக காரணங்களால் ரத்தானது. இறுதியாக கடந்தாண்டு அக்டோபர் 3ம் தேதி ரூ.30 கோடிக்கு டெண்டர் கோரியது. ஆனால், இதுவரை கட்டுமான பணிகள் தொடங்கவில்லை.
இந்நிலையில் தற்போது வீடூர் அணையில் இருந்து நேற்று முன்தினம் முதல் வினாடிக்கு 5,000 கன அடி நீர் வெளியேற்றி வருவதால், சங்கராபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பிள்ளையார்குப்பம் படுகை அணை முற்றிலும் உடைந்துள்ளதால் வெள்ளநீர் தேங்காமல் கடலுக்கு செல்வதை கண்டு, சுற்று வட்டார விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

