பண்ருட்டி தாலுகா அலுவலகத்தை விவசாயிகள் திடீர் முற்றுகை
பண்ருட்டி தாலுகா அலுவலகத்தை விவசாயிகள் திடீர் முற்றுகை
UPDATED : நவ 04, 2026 11:48 AM
ADDED : நவ 04, 2026 11:45 AM

பண்ருட்டி: பண்ருட்டி தாலுகா அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பண்ருட்டி அடுத்த ஒறையூர் ஊராட்சிக்குட்பட்ட நல்லூர்பாளையத்தில் விவசாய பயன்பாட்டிற்கான 110 செண்ட் களம் இருந்தது. அந்த களத்தை, சில மாதங்களுக்கு முன் 22 பேருக்கு பட்டா வழங்கப்பட்டது. அதனை கண்டித்து நல்லூர்பாளையம் கிராம மக்கள் நேற்று காலை, பண்ருட்டி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய தாசில்தார் சந்திரன், இதுகுறித்து கலெக்டரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அதனை கிராம மக்கள் ஏற்க மறுத்தனர். அதனைத் தொடர்ந்து மோகன் எம்.எல்.ஏ., மற்றும் தாசில்தார் சந்திரன் ஆகியோர், இப்பிரச்னை குறித்து நில எடுப்பு துணை கலெக்டர் சண்முகவள்ளிக்கு தகவல் தெரிவித்தனர்.
பின்னர், கிராம மக்களிடம் மோகன் எம்.எல்.ஏ., பேசுகையில், பிரச்னை குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளேன். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளதாக கூறினார். அதனையேற்று கிராம மக்கள் கலைந்து சென்றனர்.
