/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
/
கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 10, 2024 05:04 AM

புதுச்சேரி, : மத்திய அரசு,வேளாண் விலை பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலை சட்டம் இயற்ற வலியுறுத்தி, விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி, சுதேசி காட்டன் மில் அருகில், புதுச்சேரி விவசாயி சங்கம் சார்பில், நடந்த போராட்டத்தை இ.கம்யூ., மாநில செயலாளர் சலீம் துவக்கி வைத்து, பேசினார்.
சிறப்புத் தலைவர் மாசிலாமணி, தலைவர் கீதநாதன், பொதுச் செயலாளர் ரவி, பொருளாளர் கலியமூர்த்தி தலைமை தாங்கினர்.
ராஜா, பெருமாள், தாமோதரன், ராமமூர்த்தி, கருணாகரன், பிரகாஷ், முருகையன், பெருமாள், ஆறுமுகம், கண்ணன், இளங்கோ, ராமச்சந்திரன் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசானது,வேளாண் விலை பொருட்களுக்கு, குறைந்தபட்ச ஆதாரவிலை சட்டம் இயற்ற வேண்டும். டில்லி போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு, நிவாரணம் வழங்க வேண்டும்.
நாடு முழுதும் விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

