/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நெற் பயிருக்கான ஊக்க தொகை வழங்க விவசாயிகள் கோரிக்கை
/
நெற் பயிருக்கான ஊக்க தொகை வழங்க விவசாயிகள் கோரிக்கை
நெற் பயிருக்கான ஊக்க தொகை வழங்க விவசாயிகள் கோரிக்கை
நெற் பயிருக்கான ஊக்க தொகை வழங்க விவசாயிகள் கோரிக்கை
ADDED : அக் 25, 2024 06:13 AM
பாகூர்: நிலுவையில் உள்ள சொர்ணாவாரி பருவ நெற் பயிருக்கான, ஊக்க தொகையை, தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக, வழங்கிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுச்சேரியில் விவசாயத்தையும், விவசாயிகளையும் ஊக்குவிக்கும் வகையில், மானியம், ஊக்கத் தொகை போன்ற பல்வேறு நல திட்டங்களை, அரசு செயல்படுத்தி வருகிறது. கடந்த சொர்ணாவாரி பருவத்தில் பயிரிடப்பட்ட நெற் பயிருக்கான ஊக்க தொகை விவசாயிகளுக்கு இதுவரை வழங்கப்படவில்லை.
நிலுவையில் உள்ள ஊக்க தொகையை வரும் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக விவசாயிகளுக்கு கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். இது குறித்து பங்காரு வாய்க்கால் நீராதார கூட்டமைப்பு தலைவர் சந்திரசேகர் கூறுகையில்'' சொர்ணாவரி பருவத்தில் நடவு செய்யப்பட்ட விதை நெல் வளர்ச்சி சரியாக இல்லை. மேலும், பூச்சி மற்றும் மழையின் தாக்குதல் காரணமாக நெல் மகசூல் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், அரசு வழங்க கூடிய நெற் பயிருக்கான ஊக்க தொகையும் இதுவரை கிடைக்கவில்லை.
தீபாவளிக்கு முன்னதாக சொர்ணாவாரி பருவ ஊக்க தொகையை வழங்கிட வேளாண் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.''

