/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விவசாயிகளுக்கு கரும்பு சாகுபடியில் நவீன தொழில்நுட்பம் குறித்து பயிற்சி

ADDED : மார் 22, 2025 03:36 AM

புதுச்சேரி: மதகடிப்பட்டு பண்ணைத்தகவல் மற்றும் ஆலோசனை மையத்தில், ஆத்மா திட்டத்தின் கீழ் கரும்பு சாகுபடியில் நவீன தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி முகாம் நடந்தது.
துணை வேளாண் இயக்குனர் சாந்தி பால்ராஜ் முகாமை துவக்கி வைத்தார். வேளாண் அதிகாரி நடராஜன் வரவேற்றார். கடலுார் கரும்பு ஆராய்ச்சி நிலைய வல்லுனர் துரைசாமி, கரும்பு சாகுபடியில் விதைக்கரணை தேர்வு, பூச்சி மற்றும் நோய் தாக்குதல்களை கட்டுப்படுத்துதல் குறித்து விளக்கம் அளித்தார்.
மணக்குள விநாயகர் வேளாண் கல்லுாரி பேராசிரியர் செந்தில்குமார், கரும்பு சாகுபடியில் கடைபிடிக்க வேண்டிய பல்வேறு உழவியல் முறைகள் குறித்து பேசினார்.
விவசாயி சக்தி முருகன் இயற்கை முறையில் கரும்பு சாகுபடி மற்றும் அதனை மதிப்புக்கூட்டுதல் குறித்து செயல்முறை விளக்கம் அளித்தார்.
ஏற்பாடுகளை துணை வேளாண் அலுவலர்கள் பக்கிரி, புவனேஸ்வரி, செயல் விளக்க உதவியாளர் ஜெயசங்கர், அலுவலக ஊழியர்கள் சண்முகம், சுபாஷ் ஆகியோர் செய்திருந்தனர்.
மதகடிப்பட்டு, கலிதீர்த்தாள்குப்பம், திருபுவனை, திருவாண்டார்கோவில், சன்னியாசிக்குப்பம் மற்றும் வாதானுார் கிராம விவசாயிகள் கலந்து கொண்டனர்.
ஆத்மா தொழில் நுட்ப மேலாளர் சிரஞ்சீவி நன்றி கூறினார்.