/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கூட்டுறவு சங்கத்திற்கு போதிய நிதி விவசாயிகள் வலியுறுத்தல்
/
கூட்டுறவு சங்கத்திற்கு போதிய நிதி விவசாயிகள் வலியுறுத்தல்
கூட்டுறவு சங்கத்திற்கு போதிய நிதி விவசாயிகள் வலியுறுத்தல்
கூட்டுறவு சங்கத்திற்கு போதிய நிதி விவசாயிகள் வலியுறுத்தல்
ADDED : மே 18, 2025 09:07 PM

திருபுவனை : விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கலிதீர்த்தாள்குப்பம் திரவுபதி அம்மன் கோவில் திடலில் நடந்நது.
தலைவர் முருகையன் தலைமை தாங்கினார். பொருளாளர் ஜெயராமன் வரவேற்றார். சங்க நடவடிக்கைகள் குறித்து பொதுச் செயலாளர் ரவி பேசினார். துணைத் தலைவர் பாஸ்கர், துணை செயலாளர் ஆதி மூலம், செயலாளர் விஜயன், நிர்வாக கு உறுப்பினர்கள் முத்துராமன், ஆறுமுகம், சிவராமன், ஜானகிராமன் ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில், புதுச்சேரியில் காட்டுப்பன்றி தாக்குதலை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவற்றால் ஏற்படும் பயிர் சேதத்தை கணக்கிட்டு விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். மரபணு மாற்று விதைகளை மத்திய, மாநில அரசுகள் முற்றிலும் தடை செய்ய வேண்டும். திருபுவனை மற்றும் நெட்டப்பாக்கம் தொடக்க வேளாண் கூட்டுறவு சேவை சங்கத்தில் முறைகேடு செய்தவர்கள் மீது சட்டபூர்வமாக நடவடிக்கை எடுத்து, அவர்களிடம் இருந்து பணத்தை வசூல் செய்ய வேண்டும்.
விவசாயிகள் எளிய முறையில் கூட்டுறவு சங்கத்தில் கடன் பெறுவதற்கு மாநில அரசு போதிய நிதியை ஒதுக்கித் தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.