ADDED : மார் 16, 2026 04:29 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் பாஸ்ட் புட் கடை உரிமையாளர் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
முத்தியால்பேட்டை, திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் இயலரசன் செல்வம், 50. இவர், அதேப் பகுதியில் சிக்கன் கடையும், எஸ்.வி.,பட்டேல் சலையில் பாஸ்ட் புட் கடையும் நடத்தி வருகிறார். இவருக்கு இரண்டு கடையில் நஷ்டம் ஏற்பட்டதால் மன வருத் தத்தில் இருந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று அதிகாலை 2.30 மணியளவில் பாஸ்ட் புட் கடையில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து புகாரின் பேரில், பெரியகடை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
