/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மீன்பிடி குத்தகை ரத்து செய்ய கோரி உண்ணாவிரதம்
/
மீன்பிடி குத்தகை ரத்து செய்ய கோரி உண்ணாவிரதம்
ADDED : ஜன 31, 2024 05:28 AM

புதுச்சேரி,: வேல்ராம்பட்டு ஏரியில் மீன்பிடி குத்தகையை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சம்பத் எம்.எல்.ஏ., தலைமையில் உண்ணாவிரதம் நடந்தது.
முதலியார்பேட்டை அடுத்துள்ள வேல்ராம்பட்டு ஏரி,அந்த பகுதியில் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. ஏரியில்அரசு மூலம் மீன்பிடி குத்தகைக்கு விட்டுள்ளது. ஏரியில் மீன் வளர்ப்பதற்கு, இறந்த மாடுகள், நாய், கோழி உள்ளிட்ட இறைச்சிகள் போடப்படுகிறது.
இதனால், ஏரியில் இருந்து செல்லும் குடிநீர், மாசடைந்து, சுகாதார கேடு ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதனை தடுக்க வலிறுத்தி, மீன் பிடி குத்தகையை அரசு தடை விதிக்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி மரப்பாலம் சந்திப்பில், உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
சம்பத் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். எதிர் கட்சி தலைவர் சிவா முன்னிலை வகித்தார். தி.மு.க., அவைத் தலைவர் சிவக்குமார், செந்தில்குமார் எல்.எல்.ஏ., உருளையன்பேட்டை தொகுதி பொறுப்பாளர் கோபால், கார்த்திகேயன், தி.மு.க., மகளிர் அணி அமைப்பாளர் காயத்ரி, துணை அமைப்பாளர் அமுதா, இலக்கிய அணி அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் வீராம்பட்டினம் சக்திவேல், தமிழரசன் உட்பட பலர் பங்கேற்றனர்.