/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மகன் இறந்த சோகத்தில் ரயிலில் பாய்ந்து தந்தை தற்கொலை மகன் இறந்த சோகத்தில் விபரீதம்

ADDED : ஜூலை 04, 2025 02:19 AM
வில்லியனுார்: வில்லியனுார் அருகே மகன் இறந்த சோகத்தில், தந்தை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.
வில்லியனுார் அடுத்த உளவாய்க்கால் கிராமத்தை சேர்ந்தவர் புஷ்பராஜ், 65; கூலித்தொழிலாளி. இவருக்கு ஒரு மகள், ஒரு மகன். கடந்த சில வருடத்திற்கு முன் மகன் திடீர் உடல்நல குறைவால் இறந்தார். மகன் இறந்த துக்கம் தாங்காமல் அன்று முதல் புஷ்பராஜ் குடிக்க துவங்கினார்.
இதனால் குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டது. நேற்று முன்தினம் வாழ பிடிக்கவில்லை; என் மகன் இருக்கும் இடத்திற்கே சென்று விடுகிறேன் என, மனைவியிடம் சண்டையிட்டு வீட்டில் இருந்து வெளியே சென்றார்.
குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இதற்கிடையில் மாலை 6:30 மணியளவில் பண்டியன் நகர் பகுதியில் விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி வந்த பயணியர் ரயல் முன் பாய்ந்து புஷ்பராஜ் தற்கொலை செய்துகொண்டார்.
அவரது மனைவி நீலாவதி புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.