தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மகள் கண்டிப்பு தந்தை தற்கொலை

மகள் கண்டிப்பு தந்தை தற்கொலை

மகள் கண்டிப்பு தந்தை தற்கொலை


ADDED : நவ 29, 2024 04:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2024 04:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருக்கனுார்: குடிபோதையில் தாயிடம் தகராறில் ஈடுபட்ட தந்தையை மகள் கண்டித்ததால், அவர், பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

காட்டேரிக்குப்பம் அடுத்த குமாரப்பாளையம் புதுநகரை சேர்ந்தவர் ராஜேந்திரன், 46; லாரி டிரைவர். இவரது மனைவி சரிதா. 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். குடிப்பழக்கம் உடைய ராஜேந்திரன், கடந்த 25ம் தேதி குடிபோதையில் வீட்டிற்கு வந்து, மனைவி சரிதாவிடம் தகராறில் ஈடுபட்டு, தாக்கினார். இதைக்கண்ட அவரது மூத்த மகள் மணிமொழி, ராஜேந்திரனை கண்டித்தார்.

இதனால், மனமுடைந்த ராஜேந்திரன், வயலுக்கு அடிக்கும் பூச்சி கொல்லி மருந்தை சாப்பிட்டு வீட்டில் மயங்கி விழுந்தார். கதிர்காமம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜேந்திரன் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். புகாரின் பேரில் காட்டேரிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us