/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மொபைல்போன் பார்த்ததை தந்தை கண்டிப்பு புதுச்சேரியில் தொடரும் சோகம்
/
மொபைல்போன் பார்த்ததை தந்தை கண்டிப்பு புதுச்சேரியில் தொடரும் சோகம்
மொபைல்போன் பார்த்ததை தந்தை கண்டிப்பு புதுச்சேரியில் தொடரும் சோகம்
மொபைல்போன் பார்த்ததை தந்தை கண்டிப்பு புதுச்சேரியில் தொடரும் சோகம்
ADDED : நவ 05, 2024 06:37 AM
10ம் வகுப்பு மாணவர் துாக்கிட்டு தற்கொலை
புதுச்சேரி: மொபைல்போன் பார்த்தை தந்தை கண்டித்ததால் பத்தாம் வகுப்பு மாணவன் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
முதலியார்பட்டை ஜெயம் நகர், அண்ணாமலையார் வீதியைச் சேர்ந்தவர் சுதர்சன். டெய்லர். இவரது மனைவி தேவி. மூத்த மகள் கல்லுாரி 2ம் ஆண்டும், இளைய மகள் அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகின்றனர்.
மூன்றாவது மகன் நரேந்திரன், 15; முதலியார்பேட்டை அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.
தீபாவளி விடுமுறையில் நரேந்திரன் தனது தந்தையின் மொபைல்போனில் கேம் விளையாடி பொழுதை கழித்து கொண்டிருந்தார். கடந்த 2ம் தேதி இரவு 1:40 மணிக்கு நரேந்திரன் மொபைல்போன் பார்த்து கொண்டிருந்தார்.
இதனை கண்ட அவரது தந்தை சுதர்சன், கடந்த காலாண்டு தேர்வில் தான் அனைத்து பாடத்திலும் தோல்வி அடைந்து விட்டாய். அடுத்து அரையாண்டு தேர்வு வர உள்ளது. ஒழுங்காக படிக்காமல் ஏன் இப்படி அட்டகாசம் செய்கிறாய் என திட்டினார். காலையில் வழக்கம் போல் சுதர்சன் வெளியில் சென்று விட்டார். அவரது மனைவியும் வேலைக்கு சென்று விட்டார். மகள்கள் பள்ளி கல்லுாரிக்கு சென்றனர்.
சுதர்சன் மதியம் வீடு திரும்பியபோது, கதவு உள்பக்கமாக தாழ்பாள் போடப்பட்டு இருந்தது. கதவை உடைத்து பார்த்தபோது, நரேந்திரன் புடவையால் துாக்கு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. முதலியார்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கடந்த 1ம் தேதி தென்னஞ்சாலையில் மொபைல்போன் பார்த்தை தாய் கண்டித்ததால், பிளஸ் 2 மாணவர் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அடுத்த நாளே 10ம் வகுப்பு மாணவர் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.